12 ஆண்டுகள் கழித்து உலகம் உய்வதற்காக அருணகிரியாரை கனவில் வயலூருக்கு வா என்று அருளினார் என்பதை திருவுரூப எனும் வயலூர் திருப்புகழில்,
“கரு விழாது சீரோதி அடிமை பூணலாமாறு கனவில் ஆள் சுவாமீ நின் மயில் வாழ்வும்
கருணை வாரி கூர் ஏக முகமும் வீர மாறாத கழலும் நீப வேல் வாகும் மறவேனே” என்பதிலிருந்து அறியலாம்.
அவ்வாக்கின்படி அருணகிரியார் வயலூர் வந்து பொய்யாப்பிள்ளையாரை வணங்கி நிற்கையில்
“பக்கரை விசித்ர மணி பொற்கலனையிட்ட நடை பக்ஷி எனும் உக்ர துரகமும் நீபப் பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை வடிவேலும் திக்கது மதிக்க வரு குக்குடமும் ரக்ஷை தருசிற்றடியும் முற்றிய பனிரு தோளும் செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் “விருப்பமொடு செப்பென எனக்கருள் கை மறவேனே” என்ற அருணகிரியாரின் நூலுக்கு பொய்யா கணபதியார் தான் பெயர் வைத்தார் என்பதையும் அதை விருப்பத்தோடு சொல்ல வேண்டும் என்று விநாயகர் அருளியதையும் நினைக்கவேண்டும்.
தொடர்ந்து அருகே உள்ள வயலூர் எம்பிரான் சன்னதியை தரிசித்து “எனது திருவடி சக்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட நிறைய அமுது செய் முப்பழம் அப்பமும் நிகழ்வு போல் தேடிய வழிமுறை இக்கோடு லட்டு தம் நிறைவில் அரிசி பருப்பு அவல் பொறிநிகர் இனி இனி கதலி கடிதம் இளநீரும் மனது மகளோடு தொட்ட கருத்துரு மகாராஜலநிதி வைத்த துதிக்கர வளர கரிமுக ஒற்றை முறை தொத்திர சொற்க்கோடு வளர்க்கை முறைப்படி தொப்பன குட்டோடு வனஜா குருவி பறக்குத அர்ச்சனை மறவேனே” என்று விநாயகர் பெருமான் அருளை தெரிவித்ததில் முருகப்பெருமானின் கையில் கொண்டவற்றை விவரிக்கிறார்.
கைத்தல நிறைகனி எனும் பாடலில்
“அத் துயரது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இடமாகி
அக் குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கணம் மணமகள் பெருமாளே”
என்று வள்ளிக் கல்யாணத்தை சிறப்பாக பாடியுள்ளார்.
உம்மர் தரு எனும் பாடலில் 'தம்பி தனக்காக வணத்து அணைவோனே' என்று முருகனுக்காக விநாயகர் வனத்தில் வந்ததை பாடுகிறார். விநாயகப் பெருமானை முதன்மையாக போற்றும் ஐந்து திருப்புகழ் பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன. அவை கைத்தல நிறைகனி, உம்பர்தரு, பக்கரை விசித்திர மணி, விடமடைசு வேலை மற்றும் நினது திருவடி எனத் துவங்கும் பாடல்களாகும். அவற்றில் நான்கை மேலே நோக்கினோம்.
ஐந்தாவது பாடலாக அடியேன் கூற இருப்பது 'விடமடை சுவேலை' எனத் துவங்கும் திருப்புகழாகும். சேலம் சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபையினர் 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட புத்தகத்தில் அடியேன் அருளிய ஒரு விளக்கம்.
மற்ற சான்றோர்கள் இந்த பாடலுக்கு கூறியுள்ள விளக்கங்களில் அரசர்கள் வரலாற்றை மேற்கோள் காட்டி அரசர் மகள் விநாயகரின் பக்தை, இடையர் மகள், கிருஷ்ணர் கதை மற்றும் விநாயகர் குறித்து கூறியுள்ளார்கள். முருகப்பெருமானைக் குறித்து விளக்கத்தில் எதுவும் கூறப்படவில்லை அருணகிரிப் பெருமான் விநாயகப் பெருமானைக் குறித்துப் பாடி நமக்கு கிடைத்த மற்ற நான்கு திருப்புகழ்ப் பாடல்களையும் மற்றும் அனேகமாக எல்லா திருப்புகழ் பாடல்களையும் கேட்டிருக்கிறேன்.
இடையர் சிறு பாலை - இடையர் என்று அழைக்கப்படும் வேடர்களின் சிறிய பெண்ணான வள்ளிநாயகியை பாலை என்பது வடமொழிச் சொல் இயலிசையில் என்ற திருச்செந்தூர் திருப்பாடலில் மயில் தவிர்க்கள் இடையர் அந்த திணைக்காமல் மனச குறுமகளை வந்து அனைவரும் பாடியுள்ளதால் வேடர்களை இடையர் என்று இந்த பாடலிலும் சொல்கிறார் என்று கொள்ளலாம். திருடி கொடு போக வேடனான முருகன் திருடிக் கொண்டு போக செம்மான் மகளை திருடும் திருடன் என்பார். அருகார் எனும் பாடலில் உரத்தோடு இடத்தில் புறத்தேனை வைத்திட்டு ஒழித்தோடும் வெற்றி குமரேசா என்பார்.
வ.சு.தணிகைமணியார், திரு. செங்கல்வராயப்பிள்ளை அவர்கள் உரை
இடையர்கள் கொஞ்சம் பாலை அல்லது இடையர்களின் சிறு பெண் திருடிக் கொண்டு போக அரசன் மகள் நடந்த உண்மை வரலாற்றை அறியாமல் நெஞ்சம் மிக வாடி என்னை ஆண்டவரிடம் பிள்ளை பெறுமாறு கணபதியே என்னும் நாமங்களை வரிசைப்படக் கூற அவள் முறையீட்டுக்கு இறங்கி அந்தப் பகைவர்கள் உயிருக்கு அஞ்சும் படியாக நீ அடி எடுத்து வர நீ வரும்படி ஒளியை கேட்டு அவர்கள் அயலார் அறியாமல் ஓடப்போவது என்னடா சொல் எனக் கூற அவர்தான் முடிகளை தாக்கி அவர்களுக்கு அறிவு ஊட்டிய ஆனை முகனே. பாடவேதம் பாலை என்பது பார்வை எனவும் இறைவன் மகள் வாய்மை என்பது இறைவன் மகன் ஆண்மை எனவும் குறித்துள்ளார்
★★★
நன்னெறி சார்ந்த அமுதமொழிகள் (திருப்புகழ்)
- பல துன்பங்களிலும் உழன்று கலங்கிய சிறியனாகவும், புலையனாகவும், கொலையனாகவும் இருக்காதே.
இன்றே பாவம் விலக பரமனின் மகனை பாசமுடன் வேண்டு. (கனகந்திரன்) திருப்புகழ்.
- ஐம்புல மயக்கமும், மும்மல மயக்கமும் கொண்டு வருந்தாதே. (சருவம்படி) திருப்புகழ்.
- உனது கை தேவர் உலக பதுமநிதி. நீ கொடுக்கும் தன்மையில் மேகம், நல்ல தமிழ்ப்புலவர்கட்கு அடைக்கலம் என உலகோரிடம் யாசித்து உள்ளம் பண்பட்டுச் சுழன்ற தளர்ச்சி காணும் பம்பரம் போல் விளங்காதே.
ஊஞ்சல் ஆடும் கயிற்றை, துன்பமளிக்கும் உடலை, அழியும் பாத்திரத்தை, ஐம்பொறிகளுடன் பொருத்தி வாழும் வாழ்வை நொடிப் பொழுதில் வந்து உள்ளமான இடத்தைத் திருத்த திருமுருகனை வேண்டு. (தடக்கைப்) திருப்புகழ்.
- இன்பக் கடலில் ஆழாது ஒப்பில்லாத முக்திக் கரையைச் சேர். (குகர) திருப்புகழ். நன்றி-அருளாளர் அருணகிரிநாதரின் அமுத மொழிகள் -திருப்புகழ் மாமணி வெ. இராமு

