பிரமோதாத ஆண்டு
பிரகாசமாய் உதித்த பிறகு...
சொல்லில் செயலில் நிலை தடுமாறா
யாருக்கும் அஞ்சா
மஞ்சக்குப்பம் முனிசீப் வடக்குப்பட்டு
சுப்பிரமணிய பிள்ளையவர்கள்
வழக்கு யார் தொடர்ந்தாலும்
நீதி நிதி வழி போகாது நடுநிலைகூறுவது
வழக்கமான காலமது
வடக்குப்பட்டார் நீதியில்
மடக்கப்பட்டோர் ஏராளம்
வேலவன் விளையாட்டாய்
விடிந்ததொரு காலைப் பொழுது
பேர் போனவர்கள் மத்தியில்
பேர் எடுத்தார் சுப்பிரமணியப் பிள்ளை
ஆடல் தலைவன் ஆலயம் தனதென
நினைத்த அறநிலையத் துறையின் போதாக்
காலம் போலும் கடலூர் நீதி மன்றத்தில்
அம்பலத்தானின் ஆலயம் அது அறநிலைக்கே
என வழக்கது தொடர; அந்தணர்கள்
தலைமுறைக்கே அது என உரைக்க
விந்தையாய் வந்ததொரு வழக்கு
சாதுவாய் வாதத்தை கவனமுடன் கேட்க
கந்தனை நெஞ்சில் நிறுத்தி
வாதப் பிரதி வாதங்களை கருத்தில் நிறுத்த...
ஆலயம் எமக்கே என
ஐயறு அந்தணர் ஐவேறு உருவில் வந்தே
ஆடற்கரசன் ஆலயம் தில்லை வாழ் அந்தணர்க்கே
என ஆதாரம்தனை அடுக்க
அலர் மலர் தூவி அர்ச்சனை புரிந்து
தீப தூபம் காட்டி வேள்வித் தீயில் *சி
எ
ப*
சிவன் மனம் குளிரச்
செய்தலே எம் சேவையென
முதலாம் அந்தணர் உரைக்க...
நீரிட்ட நெற்றியோடு ருத்ர நாமம் செபிக்க
திருப் பூணூல் தரித்தே மேலாடை உடனே
வேட்டி அணிந்த அந்தணரோ
நால்வகை நெறியோடு கலிதனை வெல்ல
அறுதொழில் புரியும் அந்தணர் யாம் என
இரண்டாமவர் விளிக்க...
முக்கண் பெற்றவன்
வேல் முருகைப் பெற்றவன்
தக்கன் மருமகன் அவன்
தலையைக் கொய்தவன்
சிக்கல் தீர்ப்பவன் தில்லைவாழ் ஈசனவன்
அவன் தொண்டே என் பரம்பரை சொத்தென
மூன்றாம் அந்தணர் அரிதியிட்டுரைக்க...
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும்
அடியேன் என முதலடி தந்த சிவபெருமான்
வழி வந்த திருக்கூட்டம் யாம் என மார்தட்ட...
ஐந்தாம் அந்தணரோ அமைதியாய்
முறுவல் பூத்த முகத்தோடு தன் இடையில்
செருகிய ஓலையை ஆணவம் நீக்கி
பணிவாய் நீட்ட
திருவருள் பெற்ற முனிசீப்
அச்சுவடியை உற்று நோக்க...
'தாது மாமலர் முடியா லே‘
எனும் பாடலில்.....
“வேத நூன்முறை வழுவா மேதினம்
வேள்வி யாலெழில் புனைமூ வாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை ...... புரிகோவே”
என்ற வரிகளை மனதில் வாசிக்க
மின்னலாய் வந்த ஆதாரம் இதுவோ
என்ற உற்சாகத்தை விழி வழி காட்டாது
இந்த பாடல் எந்த நூல்... எது ஆதாரம் ஏதென வினவியபடியே...
The drawing depicts a teacher standing at the front of the room, a clock on the wall, a fan on the left, and several students standing in the back.* நெற்றி சுருங்க விழிகள் மூட
யோசனை மேலிட பாடலில் மயங்கி
இருதினங்கள் கழித்து
இனிவரும் தீர்ப்பு என மன்றத்தில் உரைக்க...
திருத்தணி முருகன் திருவருள் கூட
திருப்புகழ் எனும் முதல் அமுதத் துளி இதுவென
உணர்ந்து தெளிந்ததால்
சிந்தையில் நிறைந்த திருத்தணி முருகன் திருவருளால்
திருப்புகழ்த் தேடும் பணி திவ்யமாய் துவங்கி
பல்லாயிரம் பாடிய திருப்புகழில் ஓராயிரத்து
முன்னூற்று முப்பத்து நான்கு
திருப்புகழ் அமுதம் கிடைக்க
முழுமுதற் காரணம் இவரென அறிய
இவரைத் தொழ, குருவை உணர
முருகனை அடைய திருப்புகழ் எனும்
அமுதக் கடலில் நீந்துவோம்...
வடக்குப்பட்டார்
வழி நோக்கி வணங்குவோம்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அருணகிரிநாதர் திருவடிகளே சரணம்
தில்லைவாழ் அந்தணர்க்கே ஆலயம் சொந்தம் என தீர்ப்பெழுதி...
★★★
அருணகிரியாரின் மேதைமை திருப்புகழில் புலனாவதோடு, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திரு வகுப்பு ஆகிய நூல்களிலும் புலனாகின்றன. கந்தர் அலங்காரத்தில் கவிதை அழகும் கனிவும் திருப்புகழ் நாம் காணும் கவித்திறனையும் கற்பனைத் திறனையும் வென்று விடுகிறது எனலாம். முருகக் கடவுளின் அருள் பெற விரும்புவோர் கந்தர் அனுபூதியையும், கந்தர் அலங்காரத்தையும் ஓதி ஓதி உணர வேண்டும் என்று கூறுவது உண்டு. கவிதா சுகத்தை அறிய விரும்புவோர் கந்தர் அலங்காரத்தையும், திருவகுப்பையும் அடிக்கடி ஓதுவது நலமாக்கும். இவற்றில் உள்ள அருமையான செய்யுட்கள் சிலவற்றையாவது ஓதி ஓதி உணர்ந்து கொள்வது நன்று.
பி.ஸ்ரீ.

