பெருநிலை கோபுர வாயிலின் முன்னே பொறாமையின் தோளேறி சம்பந்தாண்டானும் அருள்நிறை அருணகிரியாரின் பக்தியைச் சோதிக்க பத்தாறு கால் மண்டபத்தில் ஐம்பெரும் குழுவினரோடு எண் பேராயத்தாரும் கைகட்டி வாய் பொத்தி பணிவாய் யாவரும் நின்றிருக்க நடுநிலை காக்கவே வந்தான் இருந்தான் வலக்கை தூக்கி போட்டியை துவக்கு என பார்வை யிலுரைத்தான் பிரபுட மாதேவனும் தன்னை மறந்து தரணியை மறந்து மண்ணை மறந்து - சம்பந்தாண்டானும் மாண்பை மறந்து மாகாளி தன்னையும் மறந்து ஆணவக் குதிரை ஏறி அவசர பாடல் பாட அவன் வணங்கும் காளி காதில் அதை வாங்காதிருக்க

கோபுரத்துஇளையனாரிடம் பெயர் பெற்று
முத்தென முதல் பாடல் பாடி
முருகனையே மகிழ வைத்து
ஊண் உருக உள்ளமது தானுருக உயிரும் சேர்ந்துருக
சந்தப் பாக்களைப் பாடி ஜெபமாலை பெற்று அருள் மாலை
அணிந்த அந்த மாலை வேளை
அருணகிரி நாதரெனும் காவியணிந்த கைக் குழவியாய்
அன்பே உருவாக கனிவே பார்வையாக;
உடலெங்கும் நீறாக; மனமெல்லாம் முருகனாக.
கரம்கூப்பி கண்ணீர் மல்க *அருணகிரிநாதர் மணியம்பா
குடமுழுக்கு
விழா மலர் 2023
-N.Sukumaran- 2023* மயில் விருத்தம் பாடியும் வாராத முருகனை
கண்மூடி மனமுருக..
‘அதலசேட னாராட ‘பாட...!!
வில் உடைத்த இராமன் போல்
கல்லுடைத்த கந்தனவன்
‘தூண்பிளந்தே
நான் வருவேன் ‘ என
கம்பத்திடையே
மயில் மீது தன் கைவேலோடு
கோடிக் கதிர்மின்ன அழகுத் திருமுருகன்
காட்சி தந்தாரே..
இருந்தவர் மறந்தனர்
மறந்தவர் விழித்தனர்
விழித்தவர் தெளிந்தனர்
தெளிந்தவர் உணர்ந்தனர்..
வந்தவர் ஆண்டவன் இல்லை..
என்றும் நம்மை ஆள்பவன் என்றும்...
கண்ணிலே காட்சியும்
மனதிலே மாட்சியும்
பெற்று கண்டவர் தானே சாட்சி ஆகினர்
தமிழுக்கும் பக்திக்கும்
முக்திக்கும் ஆண் பெற்ற ஆண் கடவுள்
இவரே என உணர்ந்தனர்
ஆணவம் அழிய
அகமும்தெளிய
சம்பந்தாண்டான் - அவன்
வெட்கத்தில் மாண்டான்
அவையடக்கத்தோடு
அருணகிரி தாள் சேர்ந்தான்...
பிரபுட தேவனோடு
மயில் வாகனனை
கண்டவர் விண்டிலர் ; விண்டவர் கண்டிலர்...
சந்தச் சக்கரவர்த்தி தாள் பணிவோம் ;
விஞ்சு புகழ் தான் பெறுவோம் ...
அருணகிரி நாதரெனும் அழகுமிளிர் பேரை
அன்புடனே தமிழ்வேளே அருகழைத்துச் சூட்டி
பெருமைமிகு கவிதைபல பிறந்திடவே சக்தி
பிரியமுடன் தந்தவேலால் நாவில்ஓம் என்ற
உருவெழுதித் தான்‘முத்தைத் தருபத்தி' என்று
உரைத்ததுமே அருணகிரி முழுப்பாடல் பாடிப்
பெருகுசந்தப் பாக்களினால் பெரும்பொருளே மேவ
பிறந்ததேநல் திருப்புகழ்தான் பேரருளே ஓங்க.

★★★★★

திருத்தணிகை மலையில்வாழ் திருமுருகன் வேண்டி திருச்சுற்று வருகையில்தன் திருக்கோலம் கண்டு பொருத்தமிலாச் சிலபேர்கள் புரிந்தகேலி தன்னைப் புகுத்தியிலர் 'சினத்தவர்முடிக்கு' மெனப் பாடத் தருக்கரெலாம் தீப்பற்றித் தான்சாம்பல் ஆக தணிகைஇறை மனமெண்ணித் தன்னுடைய நாவால் ‘நெருப்பையேஎரி'க்குமென்று திருப்புகழை ஓத நீறாகப் போனவர்கள் நின்றனரே மீண்டும்.

★★★★★

செம்மைபிர புடதேவன் சேர்ந்தநோய்தான் நீங்க தேவலோகப் பாரிசாதம் கிளியுருவில் பெற்றார் அம்பிகையின் செங்கையிலே அவ்வுருவில் இன்றும் அமர்ந்துநம்மைக் காணுமவர் அளித்தபக்தி நூல்கள் இம்மைமயில் வேல்சேவல் என்றவிருத் தங்கள் இணையிலாதத் திருப்புகழும் திருவகுப்பும் இன்னும் கம்பத்து இளையனுக்குக் கந்தரலங் காரம் கந்தரனு பூதிதிரு வெழுக்கூற்றி ருக்கை.

★★★

சில இடங்களில் இவர் கவிதை அதிசயமாக ஞானத்தை வெளியிடுகிறது. ஞானத் தபோதனர்களின் அருமைப் பெருமைகளை வெளியிடுகிறது. சில சந்தர்ப்பங்களில் வீரக்கனலைக் கக்குகிறது; இரத்த வெறிகொண்டு போராடும் அசுரர்களின் போர்க்களத்திற்குள்ளே நம்மை அழைத்துக் கொண்டு போய், 'அங்கே பார், இங்கே பார்' என்று காட்டுகிறது. சில சமயங்களில் பக்தியின் வேகம் உள்ளத்தை உருக்கி உடலையும் உருகி விடுமோ! என்று அஞ்சும் நிலையை ஏற்படுத்துகிறது. விந்தையான சந்தத்தமிழைக் கொண்டு இத்தகைய அற்புதத்தை இவர் எப்படித்தான் செய்கிறாரோ என்று அதிசயக்கிறோம்.

பி.ஸ்ரீ.