அருணகிரிநாதர், தமிழ் நாட்டில் திருவண்ணாமலைத் தலத்தில் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர் ஆவார். அருணகிரிநாதர் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் கைக்கோள செங்குந்தர் மரபில் தோன்றியவர் ஆவார். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. திருவண்ணாமலை அக்காலக் கட்டத்தில் விசயநகரப் ஆட்சிக்கு உட்பட்டிருந்தமையால் 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்', என்ற நிலை இருந்தது. வடமொழியும் தெலுங்கும் வளர்ந்தோங்கிய காலம். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் எழுதிய திருப்புகழில்

16000 இசைப்பாடல்கள் இருந்தன. இவற்றுள் 1008-க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவரது பாடல்கள் சிக்கலானச் சந்த நயத்திற்கும், தாள அமைப்பிற்கும் பெயர்பெற்றவை. இவர் எழுதிய திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், மொழிமேன்மையால், 'திருப்புகழ்' இடைக்காலத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது. மிகச் சிக்கலான, மொழியாளுமையும் போட்டியும் புறந்தள்ளிய காலமாக இருப்பினும், ‘தமிழ்’, ‘தமிழ்’ என்ற இவரது அறைகூவல், உததிபடு பேரலை யோடொப்ப, ‘ஓ...ஓ..வென்று’, ஓங்காரமிடுதல் தெற்றாம்.

அநேகத் தமிழ்க் கவியினுள்ளும், 'தமிழை' வெவ்வேறு வையான் விளித்துச் சிறப்பித்த அருணகிரிநாதரின் தமிழ்ப் பற்றை மணிப்பிரவாள சந்த முகிழ்ப்பில் சில பாடல்களின் மூலமாக இங்கு காண்போம்.

விநாயகர் துதி

பாடல் எண். 1 “கைத்தல நிறைகனி...” எனத் தொடங்கும் துதிப்பாட்டில்,

“முத்தமிழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே”

என்று தமிழுக்குமாக சேர்த்தே தமிழ்க்குமரனின் சோதரனுக்கு விண்ணப்பம் வைக்கிறார்.

விளக்கம்: இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, செந்தமிழின் சிறப்பை மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே, என்று தன்னுடைய “கைத்தல நிறைகனி...” என்னும் துதிப்பாடலிலேயே துவக்கம் இடுகிறார்.

பாடல் எண். 7 “அருக்கு மங்கையர்...” எனத் தொடங்கும் பாடலில்,

“இலக்க ணங்களும் இயலிலெ களுமிக
விரிக்கும் அம்பல மதுரித கவிதலன
இயற்று பெந்தமிழ் விதபமாடு புயமிலெ ...... புலனகவாகன”

விளக்கம்: இலக்கணங்கள் பொருந்த இயற்றமிழாலும் இசைத் தமிழாலும் விரித்துரைக்கும் அழகிய பல மதுரம் மிகுந்த கவிகளாக இயற்றப்பட்ட செந்தமிழை வகைவகையாக திருப்புயத்தில் பாமாலையாக, அணிந்தவனே, என்று, பாமாலைப் படு மேனியனாக்கிக் காண்கிறார்.

பாடல் எண். 14 “சருவம்படி வந்தனன் இங்கித...” என்று தொடங்கும் பாடலில்,

“திருபவான்றிவி ளங்கிய அண்டர்கள்
மலனயின்தயிர் உண்டவன் எண்டிலெ
திகழும்புகழ் பகாண்டவன் வண்டமிழ் ...... பயில்வார்பின்”

விளக்கம்: செல்வம் பொருந்தி விளங்கிய இடையர்களின் வீடுகளிலிருந்த தயிரை (திருடி) உண்டவனும், எட்டு திசைகளிலும் புகழ் பெற்றவனும், வளமான தமிழைப் பயில்வோர்களுடைய பின்னே திரிகின்றவனும், என்று வண்ணம் பயில்கிறார்.

பாடல் எண். 17 ‘பொருப்புறுங் கொங்கையர்...'' என்று தொடங்கி,

“மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு
மிசைக்கிடுஞ் செந்தமிழ் ...... அங்கவாயா”

என்றிடையீட்டு வாக்கியமிட்டு தமிழின் வண்மையைப் பறைசாற்றுகிறார்.

விளக்கம்: மிக்கு வந்த, வலிய சமணர்களை பெரிய திண்ணிய கழுவின் மேல் ஏற வைத்த, செந்தமிழ் (ஓதிய) வேதாங்க வாயனாகிய (தேவாரம் பாடிய) திருஞானசம்பந்தனே, என்று கூர்மை காட்டுகிறார்.

பாடல் எண். 26

“அனிபெ றுந்தோட் டம்பொற்
குழையட ரம்பாற் புண்பட்...” என்று தொடங்கி,
“தமிழினி தென்காற் கன்றிற்
றிரிதரு கஞ்சாக் கன்றைத்
தழலெழ வென்றார்க் கன்றற் ...... புதமாக”

என்று மனிதனின் எரிப்பித்தலை காட்டி ஓங்கரிக்கிறார்.

விளக்கம்: தமிழ்போல் இனிய இளம் தென்றல் காற்றில் உலாவும் மன்மதனாம் லக்ஷ்மி மகனை, நெருப்பை எழுப்பி வென்ற சிவபிரானுக்கு அன்று அற்புதமாக, என்று, 'ஓங்கார'ப் பொருளுரைக்கிறார்.

பாடல் எண். 57 “சத்தமிகு மேழுகடலைத் தேனை...” என்று தொடங்கி,

“முத்தமிழை யாயும்வரி சைக்கார
பச்சைமுகில் தாவுபுரி சைக்கார
முத்துலவு வேலைநகர் முத்தேவர்....பெருமாளே”

என்று தமிழாயும் பெருமாளாக எம்மானை உயர்த்திக் காட்டுகிறார்.

விளக்கம்: மூவுலகத்தினரும் பரவிப் போற்றும் திருவடிகளை உடையவனே, இனிதான (இயல், இசை, நாடகம் என்னும்) முத்தமிழை ஆய்ந்த சிறப்பைக் கொண்டவனே, என்று தமிழ்ச் சங்கத்தின் முதற்பாவலனாக்கியும்,

பாடல் எண் 58. “சந்தனச வாதுநிறை கற்பூர” என்று தொடங்கி,

“செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார
குன்றெறியும் வேலின்வலி மைக்கார
செஞ்சொலடி யார்களெளி மைக்கார......எழில்மேவும்”

விளக்கம்: மிகுந்த பாடல் வகைகளில் செந்தமிழைக் கொண்டு (சம்பந்தராக வந்து தேவாரமாகப் புனைந்த) நாற்*கவியாளனே, *தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:

ஆசு - எதுகை மோனையுடன் கூடியது, மதுரம் - இனிமை வாய்ந்தது, சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது, வித்தாரம் - வர்ணனை மிக்கது.

பாடல் எண். 60

“தகரநறை பூண்ட விந்தைக்
குழலியர்கள்...” என்று பதாடங்கி,
“புகலரிய தாந்த்ரி சங்கத்
தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப்
புவியதனில் வாழ்ந்து வஞ்சித் ...... துழல்மூடர்”

என்று தமிழ் கற்றும் தெரியாத மூடமனிதர்களைச் சாடித் தீர்க்கிறார்.

விளக்கம்: சொல்லுதற்கு அரிய முச்சங்கத்து தமிழ் நூல்களை நன்கு ஆராய்ந்தும், இனிமையாகப் பேசியும், பூமியில் வாழ்ந்தும், பலரை வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும்,

பாடல் எண். 64

“தரிக்குங்கலை...”

என்ற மெல்லியலாரின் ஆடை கழன்று விழும் தன்மைக்கு இரங்குமவர்,

“தகைக்குந்தனி திகைக்குஞ்சிறு
தமிழ்த்தென்றலி ...... னுடனேநின்
றெரிக்கும்பிறை யெனப்புண்படு
மெனப்புன்கவி ...... சிலபாடி‘

என்று தமிழைத் தென்றலாய் உருவகப் படுத்துகிறார்.

விளக்கம்: தடைபட்டுழன்று, தனிமையில் நின்று திகைக்கின்றேன். மெல்லிய இனிய தமிழாகிய தென்றல் காற்றினுடன் வந்து, சந்திரன் நின்று கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றேன்,

பாடல் எண். 74

“பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற்...”

என்று குற்றங்களோடு கூடிய பிறப்பென்ற இருண்ட பேரிருளாய்த் தொடங்கி,

“சிந்தையே தென்றிசைத் தென்றல்வீ சும்பொழிற்

செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே”,

என்றினிய தென்றலாய் வருடுவதைக் காண்பதும் உவப்பன்கற!.

விளக்கம்: சிந்தைக்கு உகந்தவனே, தென் திசையிலிருந்து தென்றல் வீசும் சோலைகள் (நிலறந்த)சூழ் திருச்செந்திலின் பெரியோனே

பாடல் எண். 79 “பருத்தந்தத் திலனத்தந்திட்...” என்று துவக்கி

“துணைச்செம்பொற் பதத்தின்புற்
றெனக்கென்றப் பொருட்டங்கத்
தொடுக்குஞ்சொற் றமிழ்த்தந்திப் ... படியாள்வாய்”,

என்று தனக்கு, தமிழ் தரும்படி இலறஞ்சுகிறார்.

விளக்கம் : உனது இரண்டு செம்பொன் பாதங்களில் இன்புறெச் செய்து, எனக்கு எப்போதும் அப்பெரும் பொருள் நிரம்பத்தங்கும்படி தொடுக்கப்படும் தமிழ்ச் சொற்களைத் தந்து இப்போதே ஆண்டு அருள்வாய்.

பாடல் எண். 83

“பெருக்கச் சஞ்சலித்து...” என்ற, இப்பாடலில்

“புரக்கைக்குன் பதத்தைத்தந்
தெனக்குத்தொண் டுறப்பற்றும்
புலத்துக்கண் செழிக்கெச்செந் ...... தமிழ்பாடும்”

புலவனாகத் தன்னை உயர்த்தும்படிக்கும் வேண்டுகின்றார்.

விளக்கம்: என்னைக் காப்பதற்காக உனது திருவடியைத் தந்து நான் பதாண்டு பெய்து உன்லனப் பற்றும்படியான ஞானக் கண் (அறிவு நிலல) பெழித்ததாங்கவும், பெந்தமிழ் பாடும் புலவன் என்னும் பட்டத்லத (உலககார்) பகாடுப்பதற்கும் என்று தமிழ் பாடுகின்றார்.

பாடல் எண். 86

“மனத்தின்பங் கெனத்தங்கைம்

புலப்பதன்றன் குணத்தைஞ்சிந்”

என்று ஐம்புலத் தொடர்புங் குணமும் கொண்டு தொடங்கி,

“இசைக்குஞ் செந் தமிழ்க்கொண்டங்

கிரக்கும்புன் றொழிற்பங்கங்

கெடத்துன்பங் கழித்தின்பந் ...... தருவாயே” என்று தொடர்கிறார்.

விளக்கம்: புகழ் வாய்ந்த செந்தமிழ் மொழியைக் கொண்டு பொருளாளர்பால் சென்று யாசிக்கும் இழிதொழிலின் கேவலம் நீக்கி துன்பத்தைத் தொலைத்து இன்பத்தைத் தந்து அருள் புரிவாயாக.

பாடல் எண். 91

“முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே...,

மொழிகளில் எல்லாம் முந்திய மொழியாம் தமிழ்ப்பாமாலை தொடுக்க கோடிக் கோடி சந்தங்கள் அருள வேண்டி, நிற்கின்றவர்,

விளக்கம்: மொழிகளில் முந்தியுள்ள தமிழில் பாமாலைகளை கோடிக்கணக்காக சந்தப்பா வலகயில் நீண்டனவாகப் பாடிப்பாடி, அழிகின்ற மக்களின் வீட்டு வா?ல்கள் எங்கக உள்ளன என்று கதடித் கதடி அலையாமல், மேலும்,

“அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ்சொல் பாவின் மாலலக் கார அண்டருப கார வெற் கார ...... முடிமேலே” என்றும் ஆற்றுப் படுத்துகின்றார்.

விளக்கம்: அழகிய அருள்மிக்க வேத வேள்விக்கெல்லாம் காவல் புரியும் பெருமானே, செந்தமிழ்ச் சொற்களான பாடல்களை மாலைகளாக அணிந்துகொள்பவனே, தேவர்களுக்கெல்லாம் உபகாரியே, சேவலைக் கொடியாக உடையவனே, சிரத்தின்மேல் கைகூப்பித் தொழுவோரின் அன்பு பூண்டவனே.

பாடல் எண் 93 : “மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு

மூச்சுற்றுச்செயல்....தடுமாறி” என்று மூப்பின் இழிநிலையை முதலாக்கொண்டு,

வாய்க்குச் சித்திர ...... முருகோனே” என்று,

'இலறயனார் அகப்பபாருளுக்கு', நக்கீரர் உரையே சிறந்தது என்று நிலைநாட்டியதும், விளக்கம்: வாய்ப்புள்ள தமிழின் அகத்துறையின் உறுதியான பொருளை உண்மை இதுவே என (ருத்திரசன்மனாக வந்து)* அழகுறத் தெளிவாக்கிய முருகப் பெருமானே .

பாடல் எண். 96 “செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
செந்திற் பதிநக ...... ருறைவோனே”

விளக்கம்: செம்மை பொருந்திய சொற்களை ஆளும் புலவர்களின் கூட்டம் புகல்கின்ற தமிழைச் சுடிக்கொண்டு திருச்செந்தூர் நகரில் வீற்றிருப்பவனே,

பாடல் எண். 115

“சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை

பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர ...... இனிவரவேணும்”

விளக்கம்: உண்மை ஞானத்துக்கு உறைவிடமான திருவடித் தாமரைகளைப் பற்றுக் கோடாக அடைந்து தமிழ்க் கவிதைகளை ஓதிப் பணிந்து, உருகும்படியான அன்பை இன்று அடியேனுக்குத் தர இனி வந்தருள வேண்டும்.

பாடல் எண். 117

“பெருகியொரு காசேகொ டாதவரை யைந்து
தருவைநிக ரேயாக வேயெதிர்பு கழ்ந்து
பெரியதமி ழேபாடி நாடோறுமி ரந்து ...... நிலலகாணா‘

விளக்கம்: தாராள மனத்துடன் ஒரு காசு கூட பகாடுக்காத கலாபிகலள ஐந்து கற்பகத் தருக்கலளையும்* நிகர்ப்பீர்கள் என்று எதிரிகல புகழ்ந்து, (அவர் மீது) பபரிய தமிழ்ப் பாக்கலளகய பாடி, தினமும் (இங்ஙனம்) இரந்து நிலல காண முடியாத கநாய்க்கு உள்ளாகும் பாழான இந்த உடலல நம்பி,

பாடல்எண். 121

“தமிழ்க்காழி மருதவன மலர்க்காடு திருமருகல்

தநுக்ககாடி வருகுழகர் ...... தருவாழ்கவ”

விளக்கம்: (சம்பந்தரின் திருநெறித்தமிழ் எனப்படும் செந்தமிழ்த் தேவாரத்துக்குப் பிறப்பிடமாகிய) சீகாழி, திருவிடை மருதூர், வேதரணியம், திருமருகல், தநுஷ்கோடி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமான் தந்த குமரனே,என்றிசைக்கிறார்.

'கலத்திற்கு லகப்பிடி' என்ற வகையான் மேற்கண்ட இவை ஒரு சிறிதளவே, ஆக திருப்புகழின் அனைத்துப் பாடல்களையும் ஆய்வோம் எனில், குறைந்தபட்சமாக இருநூறு பாடல்களையாவது தமிழுக்காக அற்பணித்திருப்பார் என்பது தெளிபு.

வாழ்க அருணகிரிநாதரின் அருந்தமிழ்க் கொடை! வாழ்க! வாழ்க

★★★

  • அனைத்து உயிர்க்கும் பொதுவாய், தனிப் பொருளாய், முதற்பொருளாய், பகல் இரவு கடந்த பொருளாய், அதன் முடிவாய் பெரிய வெட்ட வெளியாய், முடிவில்லா புகழிடமாய் நினைப்பதற்கு அறிதாய், அமுதம் போல் இனிதாய் விளங்கும் வேலனை வணங்கு - (பொதுவதாய்) திருப்புகழ்.
  • திருப்புகழ் பாடிச் சிவநிலை பெற்று மெய்ஞ்ஞான நிலையை அடை - (கற்பக) திருப்புகழ்.
  • பரமனின் மகனை பக்தர்களுடன் பாடிப் போற்று. (கற்பார்) திருப்புகழ். நன்றி-அருளாளர் அருணகிரிநாதரின் அமுத மொழிகள் -திருப்புகழ் மாமணி வெ. இராமு